களைகட்டிய சுற்றுலா பொருட்காட்சி.. குடும்பம் குடும்பமாக தீவுத்திடலில் குவிந்த மக்கள்

x

காணும் பொங்கலையொட்டி, சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியை, குடும்பம் குடும்பமாக சென்று பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

தமிழக சுற்றுலாத்துறை சார்பில், சென்னை தீவுத்திடலில் சுற்றுலாப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. பொருட்காட்சியில் தமிழக அரசின் சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி சிறுவர்கள் விளையாட ராட்டினங்கள் போன்றவையும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இநிநிலையில் காணும் பொங்கலையொட்டி, ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று பொருட்காட்சியை கண்டுகளித்தனர். தமிழக அரசில் எந்தெந்த துறைகள் உள்ளன, அவைகளின் செயல்பாடுகள் என்ன? சாதனைகள் என்னென்ன என்பதை, அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த 51 அரங்குகளிலும் பொதுமக்கள் பார்வையிட்டு தெரிந்து கொண்டனர். மேலும், சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சியை குடும்பத்துடன் பொதுமக்கள் கண்டுகளித்தனர். அதுமட்டுமின்றி ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டிலும், திண்பண்டங்கள் சாப்பிட்டும் காணும் பொங்கலை கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்