லட்ச கணக்கில் லஞ்சம் பெற்றதாக ஒப்புக்கொண்ட ஊராட்சிமன்ற தலைவர் - வைரல் வீடியோ

x

சிவகங்கை மாவட்டம் தெற்கு கீரனூர் ஊராட்சியில் தார் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாகேஸ்வரன் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்நிலையில், சாலை பணி காராணமாக அப்பகுதியில் உள்ள கண்மாயை ஒட்டி, பிராதான குடிநீர் குழாய் மீது 300 மீட்டர் தூரத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இதனை நாகேஸ்வரன் கண்டுகொள்ளாத நிலையில், கிராமசபை கூட்டத்திற்கு பின் அதுதொடர்பான பிரச்சனையில் தான் பெற்ற லஞ்சப்பணம் குறித்த பட்டியலை அவர் கூறியுள்ளார். அதில், தான் சாலை ஒப்பந்ததாரரிடமும், பள்ளிக்கு பெயிண்ட் அடிப்பவரிடம் மட்டுமே லஞ்சம் வாங்கியதாகவும், வேறு யாரிடமும் லஞ்சம் வாங்கவில்லை என கூறியதாக தெரிகிறது. தற்போது அந்த வீடியோ வைரலான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்