பாலஸ்தீனிய மாணவர்கள் மீது தெருவில் வைத்து துப்பாக்கிச் சூடு..! சிக்கலில் பைடன்...

x

இஸ்ரேல் - பாலஸ்தீன போருக்கு மத்தியில் அமெரிக்காவின் பர்லிங்டனில் பாலஸ்தீனிய வம்சாவளியைச் சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது... வெர்மான்ட் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள தெருவில், 3 பாலஸ்தீன வம்சாவளி மாணவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பி ஓடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... படுகாயங்களுடன் மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காவல்துறையினர் குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்