ஆபாச வீடியோ விவகாரத்தில் உண்மையை போட்டு உடைத்தாரா நடிகை ஓவியா..? வெளியான தகவல்

x

ஆபாச வீடியோ விவகாரத்தில் உண்மையை போட்டு உடைத்தாரா நடிகை ஓவியா..? வெளியான தகவல்


தான் இருப்பது போன்ற ஆபாச வீடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என திருச்சூர் காவல் ஆணையருக்கு நடிகை ஓவியா இமெயில் மூலம் புகார் அளித்து உள்ளார். இதையடுத்து எக்ஸ் இணையதளத்தில் இருந்து 3 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து எந்த வழக்கும் பதியவில்லை எனவும், எனினும், ஓவியாவிடம் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாகவும், காவல் ஆணையர் இளங்கோ தெரிவித்துள்ளார். இதனிடையே, தாரிக் என்பவருடன் பழகி வந்ததாகவும், அவருடனான உறவை துண்டித்ததால் தாங்கள் நெருக்கமாக இருந்த வீடியோவை அவர் வெளியிட்டிருக்கலாம் என ஓவியா புகார் எழுப்பியுள்ளதாக கேரள மீடியாவில் தகவல் பரவி வருகிறது. மேலும், தாரிக்கிடம் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்