"ஓபிஎஸ், ஈபிஎஸ் இதை அவசியம் செய்ய வேண்டும்" - எம்.பி. ரவீந்திரநாத் குமார் திடீர் கோரிக்கை

x

"ஓபிஎஸ், ஈபிஎஸ் இதை அவசியம் செய்ய வேண்டும்" - எம்.பி. ரவீந்திரநாத் குமார் திடீர் கோரிக்கை

அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்றால் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., ஒற்றுமையாக செயல்பட வேண்டியது அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வலியுறுத்தியுள்ளார்.

மூக்கையாதேவரின் 43-வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுகவின் இரு தரப்பு தொண்டர்கள் தனித்தனியாக சென்று மரியாதை செலுத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அவரது

நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், மரியாதை செலுத்தினர். பெருவாரியான தொண்டர்கள் ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தியதால் அசம்பாவிதத்தை தவிர்க்கும்

பொருட்டு 300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எம்பி ரவீந்திரநாத் குமார், அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும்

என்றால் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., ஒற்றுமையாக செயல்பட வேண்டியது அவசியம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்