`சர்ப்ரைஸ்' தந்த வெங்காயம்...`ஷாக்' கொடுத்த பூண்டு..!ஒரு கிலோவின் விலை இவ்வளவா..?

x

குடியாத்தம் சந்தைக்கு வரத்து அதிகரிப்பு காரணமாக, சாம்பார் வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், வரத்து குறைவு காரணமாக பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முதல் தரப் பூண்டு 400 ரூபாய் முதல் 420 ரூபாய் வரையும் இரண்டாம் தரப் பூண்டு 380 முதல் 400 ரூபாய் வரையும், மூன்றாம் தரப் பூண்டு 200 முதல் 250 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு விலை ஏற்றத்தால், இல்லத்தரசிகள், உணவக உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்