பெண்கள் அறைக்குள் திடீரென புகுந்த `லிட்டில் ஜான்' முதுகில் விழுந்த `அடி' மழை

x

சென்னை ராயப்பேட்டையில், பெண்கள் தங்கிருந்த அறையில் திடீரென புகுந்த காவலாளியை, பெண்கள் நையப்புடைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை அம்பத்தூர் இந்தியன் பேங்க் காலனியை சேர்ந்தவர் ஜான் என்கிற லிட்டில் ஜான். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தற்போது ஆர்ஓபி தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது தளத்தில் வசித்து வருகிறார். திடீரென லிட்டில் ஜான் மூன்றாவது தளத்தில் இருந்த பெண்கள் அறையில் புகுந்ததால், அதிர்ச்சி அடைந்த பெண்கள் அவரை நையப்புடைத்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார், லிட்டில் ஜானை கைது செய்து விசாரணை நடத்தியதில், 36க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும், போலீசாரிடம் இருந்து தப்பிக்க தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, காவலாளியாக பணிபுரிந்து வந்ததையும் போலீசார் உறுதிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்