திடீரென எண்ட்ரி கொடுத்த அதிகாரிகள்... அள்ள அள்ள வந்த கெட்டுப்போன இறைச்சி - அதிர்ந்து போன மக்கள்

x

சேலம் மாநகராட்சியில் ஜங்ஷன், குரங்குசாவடி, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 54 இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கெட்டுப் போன 17 கிலோ ஆட்டு இறைச்சி மற்றும் 50 கிலோ மீன்களை கைப்பற்றி அழித்தனர். மேலும் தடை செய்யப்பட்ட 5 ஆயிரத்து 800 கிலோ பிளாஸ்டிக் பைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 11 உணவகங்களில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் சுகாதாரமற்ற இறைச்சி பயன்படுத்திய 3 உணவு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்