IFS நிதி நிறுவனங்களில் ரெய்டு - அதிரடி ஆக்சன் எடுத்த அதிகாரிகள்..!

ஒரு லட்சம் ரூபாய் பணம் செலுத்தினால், மாதம் 8 ஆயிரம் ரூபாய் தருவதாக மோசடி செய்த‌தால, காட்பாடியை தலைமையாக கொண்டு இயங்கும்...
x

ஒரு லட்சம் ரூபாய் பணம் செலுத்தினால், மாதம் 8 ஆயிரம் ரூபாய் தருவதாக மோசடி செய்த‌தால, காட்பாடியை தலைமையாக கொண்டு இயங்கும் ஐ.என்.எஃப் நிதி நிறுவனம் மீது புகார் எழுந்த‌து. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான 21 இடங்களில் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். காட்பாடியில், நிதிநிறுவனத்தை நடத்தி வரும் லட்சுமி நாராயணனின் வீடு பூட்டப்பட்டு, வீட்டில் இருந்தவர்கள் தலைமறைவானதால், நாள் முழுக்க காத்திருந்த போலீசார், வீட்டையும், 2 கார்களையும் சீல் வைத்தனர். இதே போன்று, காஞ்சிபுரத்திலும் நிறுவனத்தை சேர்ந்தவர்களின் வீடும் சீல் வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்