கன்னியாகுமரியில் நள்ளிரவில் இறங்கி விநாயகர் சிலைகளை எடுத்து சென்ற அதிகாரிகள்

x

திருவட்டாறு அருகே, சிவசேனா கட்சி நிர்வாகி வீட்டில் இருந்த விநாயகர் சிலைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி அளித்துள்ள காவல்துறை, பிரச்சினைக்குரிய சில இடங்களில் அனுமதி மறுத்துள்ளது. அந்த வகையில் ஆற்றூர், திருவட்டாறு, மேல்புறம், உட்படம் உள்ளிட்ட பகுதிகளில் பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவட்டாறு பகுதியில் உள்ள சிவசேனா மாவட்ட தலைவர் வீட்டில் இருந்த சிலைகளை அதிகாரிகள் நள்ளிரவில் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்