ஆம்னி பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு - எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

x

மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு, மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அங்கு பயணிகளிடம் கட்டணங்கள் குறித்து விசாரித்த அவர்கள், அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். மேலும் சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் ஆய்வு செய்த அதிகாரிகள், அதிக கட்டணம் வசூலித்த பத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்