சென்னை மெரினாவில் இனி பறக்கலாம்.. நேப்பியர் பாலம் TO செஃல்பி பாயின்ட் வரை வருகிறது அட்டகாசமான அம்சம்

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், விரைவில் மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி அறிமுகமாகவுள்ளதாக நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்துள்ளார்....
x

சென்னை மெரினாவில் இனி பறக்கலாம்.. நேப்பியர் பாலம் TO செஃல்பி பாயின்ட் வரை வருகிறது அட்டகாசமான அம்சம்

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், விரைவில் மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி அறிமுகமாகவுள்ளதாக நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்துள்ளார்.

குறிப்பாக சென்னையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்வகையில் பல்வேறு பணிகளை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த வரிசையில் ரோப் கார் சேவை குறித்த விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, நேப்பியர் பாலம் முதல் நம்ம சென்னை செல்ஃபி பாயின்ட் வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணியில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது.

இதற்கான கட்டமைப்பை மெரினா கடற்கரையில் ஏற்படுத்த முடியுமா?, ரோப் கார் சேவை கொண்டு வந்தால் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் வரவேற்பு இருக்குமா ? போன்ற சாத்தியக்கூறுகள் ஆராயப்படவுள்ளன.

இந்த திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், அடுத்த கட்டமாக நேப்பியர் பாலம் முதல் ராயபுரம் வரையிலும், அடையாறு ஆற்றின் குறுக்கேயும் ரோப்கார் அமைக்க ஏற்பாடு முன்னெடுக்கப்படலாம் என தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்