தேர்வுக்கு பயந்து அப்ஸ்காண்டான ஸ்கூல் பாய்ஸ்.. அரவணைத்தபடி அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, தேர்வுக்கு பயந்து பள்ளிக்கு வராத பழங்குடியின மாணவர்களிடம் இரு பெண் போலீசார் அன்பாக பேசி பள்ளிக்கு அழைத்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காபி காடு என்னும் இடத்தில் உள்ள மலை கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவர்கள், புளியம்பாறை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியில் தேர்வு நடைபெற இருந்த நிலையில், 7 மாணவர்கள் பள்ளிக்கு வராதது தெரியவந்தது. இதனையடுத்து பள்ளி சார்பாக அளித்த தகவலின் பேரில், கூடலூர் காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உஷா மற்றும் பெண் காவலர் அழகரசி ஆகியோர், தேர்வுக்கு பயந்து தங்களது கிராமத்தில் ஒளிந்துகொண்ட மாணவர்களைக் கண்டறிந்து பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்