டிசம்பர் காட்சிகளை காட்டிய `மே' - தண்ணீரில் சிக்கிய திருச்செந்தூர் பஸ்..

x

நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுற்று வட்டாரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இந்த நிலையில், திருச்செந்தூர் மெயின் ரோட்டில் உள்ள ரயில்வே தரைப்பாலத்தில், சுமார் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவ்வழியே திருச்செந்தூருக்கு சென்ற அரசு பேருந்தை பொது மக்கள் எச்சரித்தனர். இதை கண்டு கொள்ளாத ஓட்டுநர், தொடர்ந்து பேருந்தை இயக்கியதால், தண்ணீரில் சிக்கிக் கொண்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்