நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்... ஆள் யாருனு தெரிந்ததும் ஷாக்கான போலீஸ்
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்... ஆள் யாருனு தெரிந்ததும் ஷாக்கான போலீஸ்
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் உட்பட பல்வேறு துறை சார்ந்த போலீசார், ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக, சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு தொலைபேசி வந்துள்ளது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த போலீசார், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ரயில் நிலையம் முழுவதும் அவர்கள் தீவிரமாக சோதனையிட்டனர். இதற்கிடையே, மிரட்டல் விடுத்தவரின் தொலைபேசி எண்ணை வைத்து, இருப்பிடத்தை போலீசார் தேடியபோது, அது, நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சிவபெருமாள் என்ற கூலித் தொழிலாளியின் தொலைபேசி எண் என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, மது போதையில் அவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்து. இதைடுத்து அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
