நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா - இரவு 7 மணிக்கு நிலையை அடைந்த நெல்லையப்பர் தேர்

x

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா - இரவு 7 மணிக்கு நிலையை அடைந்த நெல்லையப்பர் தேர்

நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழாவையொட்டி, தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆனிப் பெருவிழா, பத்து நாட்கள் நடைபெற்றது. விழாவின், சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் கோவில் தேர், நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த நிலையில், இரவு 7 மணி அளவில் நிலையை அடைந்தது. அதனை தொடர்ந்து, காந்திமதி அம்பாள் தேரும், நிலைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த தேரோட்ட திருவிழாவில், 13 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2000 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்