போதைக்கு வலி நிவாரண மாத்திரை.. வாழ்க்கையை தொலைத்த 3 சிறார்கள்.. நெல்லையில் அதிர்ச்சி

x

நெல்லை டவுன் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த சிறார்களை மடக்கி பிடித்த விசாரணை நடத்திய நிலையில் முன்னுக்குப்பின் முரணாக தகவல் கொடுத்துள்ளனர். அவர்களை சோதனை செய்ததில், அவர்களிடம் ஏராளமான வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து விசாரித்தபோது, அந்த மாத்திரைகளை புணேவில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி, போதை மாத்திரைகளாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 85 மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், மூவர் மீதும் பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்