தாமிரபரணி ஆற்றுக்கு செல்ல தடை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

x

கனமழையால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஆற்றிலோ அணைக்கட்டு பகுதிகளுக்கோ யாரும் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரம் அணைக்கட்டிலிருந்து, தாமிரபரணி ஆற்றில் 5 ஆயிரத்து 400 கன அடி மழைநீர் சென்று கொண்டிருப்பதாகவும், மேலும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்