கேட்ட அதிபயங்கர சத்தம் - அமர்ந்த நிலையிலே உயிர் பலி

x

நாட்றம்பள்ளி அருகே, சாலையோரம் நிறுத்தி இருந்த லாரி மீது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி, நாட்றம்பள்ளி அடுத்த குப்பம் பகுதிக்கு வந்தபோது, சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது அதிவேகமாக மோதியது. இதில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ராமன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்