நடுங்க வைத்த நாங்குநேரி கோரம்... பாதிக்கப்பட்ட மாணவனுக்கு... கலெக்டர் சொன்ன முக்கிய தகவல்

x

நாங்குநேரியில் சக மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அண்ணன், தங்கை ஆகிய இருவரும், நெல்லை நகர் பள்ளிகளில் படிப்பைத் தொடர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

நாங்குநேரியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவனை, சக மாணவர்கள் 3 பேர், ஆகஸ்ட் 9-ஆம் தேதி வீட்டுக்குள் புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளனர். தடுக்க வந்த மாணவனின் தங்கையையும் அவர்கள் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாதிய பிரச்சனையால் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவரும், அவருடைய தங்கையும் அவர்களின் விருப்பப்படி நெல்லையில் உள்ள பள்ளிகளில் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் கார்த்திகேயன் கூறியுள்ளார். அவர்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் தாயார், நெல்லையில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்