"அரசு விழாவில் பேரூராட்சி தலைவர் புறக்கணிப்பு?" - அருகே கூப்பிட்டு அமர வைத்த எம்பி கதிர் ஆனந்த்

x

"அரசு விழாவில் பேரூராட்சி தலைவர் புறக்கணிப்பு?" - அருகே கூப்பிட்டு அமர வைத்த எம்பி கதிர் ஆனந்த்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. வேலூர் எம்பி கதிர் ஆனந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விழாவில், பேரூராட்சி

தலைவர் தமிழரசி வெங்கடேசன் மேடைக்கு அழைக்கப்படவில்லை. இதுபோன்று அரசு விழாக்களில், பட்டியலின பெண் பேரூராட்சி தலைவர் என்பதால் புறக்கணிப்பதாக ஒரு தரப்பினர்

வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வேலூர் எம்பி கதிர் ஆனந்த் தலையிட்டு, இருதரப்பினரையும் சமாதானம் செய்தார். மேலும், விழா மேடையில் தனக்கு அருகில் உள்ள இருக்கையில்

பேரூராட்சி தலைவர் தமிழரசி வெங்கடேசனை அமர வைத்தார்.



Next Story

மேலும் செய்திகள்