பணிக்கு தாமதமாக வந்த பேரூராட்சி ஊழியர்கள்.! அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்

x

பணிக்கு தாமதமாக வந்த பேரூராட்சி ஊழியர்கள்.! அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்

பேரூராட்சி ஊழியர்கள் மீது புகார்

பேரூராட்சியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

பணிக்கு தாமதமாக வந்த 3 பேர் பணியிடை நீக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சியில், பணிக்கு தாமதமாக வந்த மூன்று ஊழியர்களை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். நாட்றம்பள்ளி பேரூராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது பணிகளை ஒழுங்காக செய்வதில்லை என புகார்கள் எழுந்தன. இதனால் பேரூராட்சிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா திடீரென ஆய்வு செய்தார். அப்பொழுது, வரி தண்டலர் கம்சலா, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காவலர் ஜெயபால், அலுவலக உதவியாளர் அனுமந்தன் ஆகியோர் பணிக்கு தாமதமாக வந்தனர். அவர்கள் மீது ஏற்கனவே புகார்கள் இருந்ததால், 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்