மதுரை - தேனி ரயில் சேவையை மலர் தூவி வரவேற்ற எம்.பி. ரவீந்திரநாத்

மதுரை - தேனி ரயில் சேவையை மலர் தூவி வரவேற்ற எம்.பி. ரவீந்திரநாத்
x

திண்டுக்கல் - லோயர் கேம்ப் அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்துவேன் என்று தேனி எம்.பி., ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். மதுரை - போடி இடையே அகல ரயில் பாதை திட்டம் 75 சதவிகிதம் முடிந்த நிலையில், பிரதமர் மோடி சென்னையில் இருந்து காணொலி மூலம் துவக்கி வைத்தார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் இருந்து புறப்பட்டு தேனி வந்தடைந்த ரயிலை ரவீந்திரநாத் எம்.பி. மலர் தூவி ரயிலை வரவேற்றார். இதே போன்று வழியெங்கும், மக்கள், ஆரவாரத்துடன் உற்சாகமாக ரயிலுக்கு வர​வேற்பு அளித்தனர்.
Next Story

மேலும் செய்திகள்