நடுவழியில் நின்ற மலை ரயில் - அனைத்து ரயில்களும் ரத்து - காட்டுக்குள் பயணிகள் தவிப்பு
இன்ஜின் கோளாறு காரணமாக நடுக்காட்டில் மலை ரயில் நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு குன்னூர் வர வேண்டிய மலை ரயில், இன்ஜின் கோளாறு காரணமாக ஆடர்லி அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து குன்னூர் பணிமனையில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டு, மூன்று மணி நேரம் தாமதமாக ரயில் குன்னூர் வந்து சேர்ந்தது. முன்னதாக, நடுக்காட்டில் நின்ற ரெயில் பயணிகளுக்கு உணவு, குடிநீர் கொண்டு செல்லப்பட்டது. மேலும், இன்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து மலை ரயில்களும் ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்
Next Story
