மீண்டும் சிறை செல்லும் அமைச்சர் செந்தில்பாலாஜி - ED எடுத்துள்ள முடிவு?

x

அமைச்சர் செந்தில் பாலாஜியின் அமலாக்கத்துறை காவல், இன்றுடன் முடிவடைகிறது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் ஆறு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 7-ஆம் தேதி அமலாக்க துறையினர் காவலில் எடுத்து, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தியது. அமலாக்கத் துறை காவல், இன்றுடன் முடிவடைவதால், மாலை 4 மணிக்கு நீதிபதி குடியிருப்பில் நீதிபதி அல்லி முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் ஆஜர் படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விசாரணையின்போது, ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதில் அளித்திருப்பதாக கூறப்படும் நிலையில், மேலும் 3 நாட்கள் அவகாசம் கேட்க அமலாக்கத் துறை முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்