மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், வீரவசந்தராயர் மண்டபம் புதுப்பித்து கட்டும் பணிகள் முடிந்தவுடன், குடமுழுக்கு நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபம், கடந்த 2018ம் ஆண்டு நிகழ்ந்த தீ விபத்தில் சேதமடைந்தது. மண்டபத்தை புதுப்பித்து கட்டும் பணிகள், திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் கட்டும் பணிகள் என சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய திட்டப் பணிகளை, முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 10ம் தேதி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.


இந்நிலையில், பணிகளை மேற்கொள்வதற்கு உண்டான நடைமுறைகள் குறித்து, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், துறை செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மண்டபத்தை முழுமையாக கட்டி முடிக்க 3 ஆண்டுகாலம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, பணிகளை துரிதமாக மேற்கொள்ள அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், பணிகள் நிறைவடைந்தவுடன் விரைவில் குடமுழுக்கு நடத்தவும், ஆக்கிரமிப்பு நிலங்களை உடனடியாக மீட்டு, கோயிலுக்கு வருவாய் பெருக்கிடவும், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






Next Story

மேலும் செய்திகள்