நீலகிரியில் நடந்த மினி பாஸ்ட் அண்ட் பியூரியஸ்..'Vin Diesel'-ஆக மாற நினைத்து ரூ.5000த்தை இழந்த நபர்

x

நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் ரேஸ் ஓட்டிய 3 ஜீப் ஓட்டுநர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கல்லட்டி மலைப்பாதை மிகவும் செங்குத்தாக இருப்பதால் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளுக்கு நடுவே, இதே பாதையில், 3 ஜீப்கள் ரேஸில் ஈடுபட்ட வீடியோ சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து ரேஸில் ஈடுபட்ட 3 ஓட்டுநர்களுக்கு, புதுமந்து காவல்துறையினர் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்