அமைச்சர் பேசுவது போல Mimicry..ஜவுளிக்கடை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல்... தட்டி தூக்கிய போலீஸ்

x

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, அமைச்சர் போல குரலை மாற்றி செல்போனில் பேசி, ஜவுளிக்கடை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஜவுளி கடைக்கு, கடந்த 12ம் தேதி போன் ஒன்று வந்துள்ளது. அதில் அமைச்சரின் உதவியாளர் பேசுவதாகவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் பேசுகிறேன் என்றும், தாங்கள் மாநாடு நடத்த உள்ளதாகவும் அதற்கு பணம் வேண்டும் எனவும் அந்நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர் இதில் சந்தேகம் அடைந்த ஜவுளிக்கடை கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், முகம்மது ரபீக் என்ற நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்