அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கம்... என்ன காரணம்..? - அதிர்ச்சியில் மக்கள்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்று காலை நில நடுக்கம் பதிவாகியுள்ளது. கர்நாடகா மற்றும் தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் லேசான நில நடுக்கம் பதிவானது. இந்நிலையில், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் இன்று காலை 8.46 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.8ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், காலை 9 மணியளவில் நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.9ஆக பதிவாகியுள்ளது.
Next Story
