மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வந்த நல்ல செய்தி... வெளியான அறிவிப்பு

x

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மனநிலை பற்றி அறிந்து கொள்ள, நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விருப்பமே இல்லாமல்தான் விருப்ப ஓய்வு கடிதத்தை கொடுத்ததாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தேயிலை தோட்ட நிறுவனத்தினரிடமும், தற்போது பணியாற்றி வரும் 580 தொழிலாளர்களிடமும், தனித்தனி குழுவாக அழைக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது. தொடர்ந்து பேசிய தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், தொழிலாளர்களுக்கு கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு கொடுக்கப்பட்டு இருந்தால், அந்த ஓய்வு ஆணை ரத்து செய்யப்படும் என அறிவித்தனர். மேலும் அந்த தொழிலாளர்கள் பணிகளை தொடர்வது குறித்து, நிறுவனம் தான் முடிவை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்