"மாமல்லபுரம் டூ கோவளம் வரை"...கேலோ இந்தியாவில் அசத்திய தமிழக வீராங்கனை - இதுவரை 4 பதக்கங்கள்

x

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் சைக்கிளிங்கில் தமிழக வீராங்கனை ஸ்ரீமதி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மாமல்லபுரம் முதல் கோவளம் வரை சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. இதில் கேரள வீராங்கனை அலென் லில்லி கியூபலோ தங்கப் பதக்கம் வென்றார். ஜார்க்கண்ட் வீராங்கனை சந்தோஷி ஓரன் வெள்ளியும் தமிழக வீராங்கனை ஸ்ரீமதி பரிசு வெண்கலமும் வென்றனர். நடப்பு தொடரில் தமிழக வீராங்கனை ஸ்ரீமதி இதுவரை 4 பதக்கங்களை வசப்படுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்