மதுரை சித்திரை திருவிழா மீனாட்சியம்மன் திருக்கல்யாண டிக்கெட்.. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

x

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண தரிசனத்திற்கான கட்டணச் சீட்டு முன்பதிவு துவங்கியது. புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற ஏப்ரல் 11ம் தேதி முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருக்கல்யாணத்தில் பங்கேற்று தரிசிக்க விரும்பும் பக்தா்களின் 200, 500 ரூபாய் செலுத்தி கட்டணச் சீட்டுகள் பெற வேண்டும். மேலும், பக்தா்களின் வசதிக்காக அறநிலையத்துறை இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. திருக்கல்யாணத்திற்கான முன்பதிவு இன்று முதல் வருகிற 13ம் தேதி இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. கட்டணச் சீட்டு பெற ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்