மதுரை சித்திரை திருவிழாவில் வடமாநில கும்பல் தீட்டிய திட்டம்... கடைசி நொடியில் தட்டி தூக்கிய போலீஸ்

x

மதுரை சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பக்தர்களிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த வடமாநில கும்பலை போலீசார் கைது செய்தனர். கட்ராபாளையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் தங்கியிருந்தது. அந்த விடுதியின் மேலாளர் அரசகுமார் என்பவர், அந்த அறைக்கு தண்ணீர் கொண்டு சென்றுள்ளார். அப்போது, கொள்ளையடிப்பது குறித்து அந்தக் கும்பல் ஹிந்தி மொழியில் பேசிக் கொண்டிருந்ததை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, அங்கு வந்த போலீசார், மத்தியபிரதேசத்தை சேர்ந்த நவ்சத், ஹின்னா கான், சப்னா ஷா உள்ளிட்ட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்