மதுரை எய்ம்ஸ் போராட்டம் - உடனடியாக வரும் டெல்லி குழு

x

#thanthitv #madurai #aiims #students

மதுரை எய்ம்ஸ் போராட்டம் - உடனடியாக வரும் டெல்லி குழு

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி இன்னும் கட்டப்படாததால், அதன் மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் பயின்று வந்தனர். அவர்கள், தங்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று, சமீபத்தில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் கல்லூரியின் இயக்குனர் ஹனுமந்த்ராவ், மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து, டெல்லி ஆய்வு குழுவினர் விசாரிக்க உள்ளனர் என்றும், அவர்கள் ஆலோசனைப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்ட பணிகள் 18 மாதங்களில் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்