போட்டி தேர்வில் பூத்த காதல்..காதலனை கரம்பிடித்து காவல் நிலையம் வந்த பெண்... இறுதியில் நடந்த டிவிஸ்ட்

x

போட்டி தேர்வில் பூத்த காதல்..காதலனை கரம்பிடித்து காவல் நிலையம் வந்த பெண்... இறுதியில் நடந்த டிவிஸ்ட்

சேலம் மாவட்டம் காமலாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக். எம்எஸ்சி பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு அரசு பணிக்காக தேர்வு எழுதி வந்தார். ஓராண்டு

முன்பு அரசு பணி தேர்வுக்காக, ஈரோடு வந்தபோது கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த கவிப்பிரியா என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால்,

திருமணத்திற்கு எதிர்ப்பு எழுந்தது. இதனால், வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் கோயிலில் வைத்து திருமணம் செய்துக் கொண்டனர். பின்னர் பாதுகாப்புகோரி ஓமலூர் காவல்

நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தையில் போலீசார் ஈடுபட்டனர். இந்த திருமணத்திற்கு கவிப்பிரியா குடும்பத்தினர்

சம்மதிக்காததால், காதலனின் பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் காவல்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்