போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

x

தமிழ்நாட்டில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

கோவையில் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து, வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. 430க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு, ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட 33 வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன.

தூத்துக்குடியில் உள்ள ஆயிரத்து 624 வாக்குச்சாவடிகளுக்கு, போலீசார் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் மாவட்டம் முழுவதும் பதட்டமான வாக்குச்சாவடிகள் மற்றும் 1057 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா அமைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 338 வாக்குச்சாவடிகளுக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியை, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள இரண்டாயிரத்து 751 வாக்குச்சாவடி மையங்களுக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலகத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்