மகளை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனரை கழுத்தறுத்து கொன்ற பெண் சாராய வியாபாரி

x

மகளை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனரை கழுத்தறுத்து கொன்ற பெண் சாராய வியாபாரி..

கடலூர் அருகே சாராய வியாபாரியின் மகளை கர்ப்பம் ஆக்கிய ஆட்டுடோ ஓட்டுனர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் குறவன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சிவமணி. இவரது உடல் அதே பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிவமணியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அதேப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த வனிதா என்பவருக்கும், சிவமணிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் வனிதாவின் மகளை சிவமணி ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பம் ஆக்கியதாக தெரிகிறது .

இதனால் ஆத்திரமடைந்த வனிதா, சிவமனியை தனது கூட்டாளிகளின் உதவியோடு கொலை செய்து, உடலை வீசி விட்டு சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து வனிதாவை கைது செய்த போலீசர், இச்சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்ட மேலும் இருவரை தேடி வருகின்றனர்.,


Next Story

மேலும் செய்திகள்