கம.. கம.. விருந்துடன்.. பள்ளி மாணவர்களுடன்.. பிறந்தநாளை கொண்டாடிய எம்.எல்.ஏ
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான சிந்தனைச்செல்வன்,
தனது பிறந்தநாளை பள்ளி மாணவர்களோடு கொண்டாடினார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், அரசு உதவி பெறும் பருவத ராஜா குருகுலம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களோடு கேக் வெட்டினார். பின்னர் மாணவர்களுக்கென, தனது சார்பாக உணவு ஏற்பாடு செய்து, அவர்களோடு அமர்ந்து மதிய உணவறிந்தினார். இதில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
