இஸ்லாமிய அமைப்புகளுக்கிடையே நிலத் தகராறு; நிலத்தில் சூடம் ஏற்றி வழிபட்ட புதிய நபர் - திருச்சியில் பரபரப்பு

இஸ்லாமிய அமைப்புகளுக்கிடையே நிலத் தகராறு; நிலத்தில் சூடம் ஏற்றி வழிபட்ட புதிய நபர் - திருச்சியில் பரபரப்பு
x

திருச்சி திருவெறும்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் சொந்தம் கொண்டாடும் சர்ச்சைக்குரிய இடத்தில் சூடம் ஏற்றி வழிபட்ட நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடியில், வக்பு வாரியத்திற்கு சொந்தம் என கூறப்படும் 7ஏக்கர் நிலத்தினை நிர்வாகம் செய்வது தொடர்பாக இஸ்லாமிய நல்வாழ்வு கழகம் மற்றும் ஷா காதிரி பள்ளிவாசல் நிர்வாகிகள் இடையே பிரச்சனை நிலவி வருகிறது. இந்நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சர்ச்சைக்குரிய இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு சொத்துக்களை மீட்டு வருவதாக அவர் பேட்டியளித்தார். இந்நிலையில் கும்பக்குடிக்கு வந்த பெரியண்ணன் என்பவர், சர்ச்சைகுரிய இடம் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமெனவும், இந்த இடம் தங்களது மூதாதையர் வாங்கிய இடம் எனவும் கூறி சூடம் ஏற்றி வழிபட்டார். கும்பக்குடி நிலத்தினை நிர்வாகம் செய்வது தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையே தகராறு நிலவி வரும் நிலையில், அந்நிலத்திற்கு மேலும் ஒருவர் சொந்தம் கொண்டாடும் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்