குலசை தசரா திருவிழா - கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது

x

குலசை தசரா திருவிழா - கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம், அடுத்த மாதம் 5ஆம் தேதி நள்ளிரவு குலசேகரன்பட்டினம் கடற்கரையில்

நடைபெறுகிறது. இதையொட்டி, உற்சவர் ஸ்ரீ முத்தாரம்மனுக்கு காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, காலை 9 மணிக்கு செப்பு

கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தசரா திருவிழா தொடங்குகிறது. பின்னர், விழா நாட்களில் இரவு 10 மணிக்கு மேல் முத்தாரம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி

திருவீதி உலா வந்து அருள் பாலிப்பார்.


Next Story

மேலும் செய்திகள்