போலந்து நாட்டில் முளைத்த காதல்.. தமிழ்நாட்டில் திருமணமாக மலர்ந்தது.. கடல் தாண்டி இணைந்த மனம்

x

கிருஷ்ணகிரி இளைஞர் ஒருவர் போலந்து பெண்ணைக் காதலித்து மணம் முடித்துள்ளார்..

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே குரியனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த திம்மப்பா, பத்மம்மா தம்பதியின் மகன் ரமேஷன் போலந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஆராய்ச்சித் துறையில் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

போலந்தில் கல்லூரியில் படிக்கும் காலத்தில் அதே நாட்டைச் சேர்ந்த எவலினா மேத்ரோவுடன் அவருக்குக் காதல் மலர்ந்தது... 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் நீண்ட யோசனைக்குப் பிறகு வீட்டிலும் திருமணத்திற்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டது... பெண்ணின் பெற்றோர் வர முடியாத சூழலில் இருவருக்கும் கிருஷ்ணகிரியில் பாரம்பரியப்படி இனிதே திருமணம் நடந்தேறியது. சுற்றத்தார் நண்பர்கள் புடை சூழ ரமேஷன் எவலினாவை மணந்தார்... ஏராளமான ஊர் மக்கள் ஆச்சரியத்துடன் புதுமணத் தம்பதியைக் கண்டு மனமாற வாழ்த்திச் சென்றனர்...


Next Story

மேலும் செய்திகள்