சிறுநீர் கழித்த இளைஞரை சரமாரியாக தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் - வெளியான அதிர்ச்சி வீடியோ

x

கோவை ரயில் நிலையம் முன்புள்ள ஆட்டோ ஸ்டண்ட் அருகே, சிறுநீர் கழித்த இளைஞரை, ஆட்டோ ஓட்டுநர்கள் சரமாரி தாக்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சென்னையைச் சார்ந்த அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் கோவையில், ஈஷா மையத்திற்கு சென்று விட்டு சென்னை திரும்ப ரயில் நிலையம் வந்துள்ளனர். அப்போது ஒருவர் அவசரமாக அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் அருகே சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மற்ற ஆட்டோ ஓட்டுனர்கள் திரண்டு வந்து, அந்த இளைர்களை கடுமையாக தாக்கினர். இந்த வீடியோ, வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்