வறுமையால் விலைபோன கிட்னி... பலிகடா ஆன குழந்தைகள் ...வறுமைன்னு வந்தா சட்னி கூட மிஞ்சாது...

x

திருச்செங்கோடு குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் அரசு மருத்துவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு பெண்ணிடம் கிட்னியை விற்க வற்புறுத்திய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண் குழந்தையை விற்க முயன்ற புகாரில், அரசு மகப்பேறு மருத்துவர் அனுராதா மற்றும் புரோக்கர்கள் லோகாம்பாள், பாலாமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மருத்துவர் அனுராதாவின் 2 மருத்துவமனைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் புரோக்கர்கள் லோகாம்பாள், பாலாமணி ஆகியோரை செல்போனில் அதிகம் தொடர்பு கொண்ட நபர்களை அழைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையை சேர்ந்த மீரா என்ற பெண்ணை அழைத்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மீராவின் குடும்ப வறுமையை பயன்படுத்தி அவருடைய கிட்னியை விற்குமாறு லோகாம்பாள் வற்புறுத்தியது தெரியவந்துள்ளது. அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்ட போலீசார், தொடர்ந்து மற்ற நபர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.


Next Story

மேலும் செய்திகள்