இடிந்துவிழும் நிலையில் வீடுகள் | பரிதவிக்கும் மக்கள்-பரிதாப காட்சிகள்

கரூர் அருகே எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளில் பொதுமக்கள் அச்சத்துடன் வசிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
x

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.வெள்ளாளப்பட்டியில் வசிக்கும் மக்களுக்கு, குடிசை மாற்று வாரியம் சார்பில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. அந்த வீடுகளின் மேற்கூரைகளில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. கான்கிரீட் மேற்கூரையும் விரிசல் விட்டு காணப்படுவதால், மழைக்காலங்களில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால், அச்சத்துடனே இரவில் தூங்க வேண்டிய நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றன. மேலும், அப்பகுதியில் சாக்கடை வசதி, சாலை வசதியின்றியும் இருப்பதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், அடிப்படை வசதிகளை செய்துத் தந்து, இடியும் நிலையில் உள்ள வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்