கனிமொழி வாகனத்தில் துருவி துருவி சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை

x

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பிரசாரம் மேற்கொண்டார். முதுகுளத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள சாயல்குடி, மாரியூர், நரிப்பையூர், கன்னிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது கடுகு சந்தை சத்திரம் அருகே செல்லும் போது அவருடைய வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். பின்னர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு மீண்டும் தூத்துக்குடி நோக்கி செல்லும் போது வேம்பார் பகுதியில் மீண்டும் பறக்கும் படை அதிகாரிகள் அவரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்