கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் - சிபிசிஐடி எச்சரிக்கை..!

மாணவி மரம் தொடர்பாக சமூக ஊடகங்கள் தமது சொந்த கருத்துக்களையும், காணொலி காட்சிகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு இணையாக...
x

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கிய நிலையில், சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு இணையாக, தனிநபரோ அல்லது நிறுவனங்களோ புலன் விசாரணை நடத்தினால், அவர்கள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவி மரம் தொடர்பாக சமூக ஊடகங்கள் தமது சொந்த கருத்துக்களையும், காணொலி காட்சிகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு இணையாக புலன் விசாரணை நடத்துவதும், சிபிசிஐடியின் புலன் விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, காணொலி காட்சிகளை வெளியிட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாணவி மரணம் தொடர்பான கருத்துக்களை, 9003848126 என்ற செல்போன் எண்ணில் தெரியப்படுத்தலாம் என்றும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்