தாயின் குரூர புத்தி... 7 வயது மகளை கிணற்றில் வீசிய கொடூரம்... வாக்குமூலம் கேட்டு அதிர்ந்த போலீசார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரின் 7 வயது மகளான அதிசயா இரு நாள்களுக்கு முன் மாயமான நிலையில், அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் சடலமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சிறுமியின் தாய் சத்யா தலைமறைவாக இருந்த நிலையில், பூட்டை கிராம நிர்வாக அலுவலரிடம் அவர் சரணடைந்தார். விசாரணையில், கணவருக்கு தெரியாமல் பலரிடம் கடன் பெற்ற சத்யா, கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், பணம் கொடுத்தவர்கள் தினமும் வீடு தேடி வந்த நெருக்கடி கொடுத்திருக்கின்றனர். இதனால், கடன் விவகாரம் கணவருக்கு தெரிந்து விடுமோ என அவர் பயத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், குழந்தையை கொன்று வீட்டை இழவு வீடாக மாற்றினால், சிறுது காலத்திற்கு கடன் கேட்டு யாரும் நெருக்கடி தர மாட்டார்கள் என எண்ணி... குழந்தையை அவர் கொன்றது தெரியவந்திருக்கிறது. பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தில், சத்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
