"விரைவில் கலைஞர் உணவகம்"

x

"விரைவில் கலைஞர் உணவகம்"

கூடிய விரைவில் தமிழகத்தில் "கலைஞர் உணவகம்" திறக்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், முழு நேர நியாய விலை கடைகள், பகுதி நேர கடைகளின் கட்டட கட்டமைப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் பியுஷ் கோயலிடம், தமிழக உணவுத்துறை முதன்மை செயலாளர் சார்பில் விரிவாக பவர்பாயின்ட் வடிவில் விளக்கமளிக்கப்பட்டது என்றார். மேலும் கூடிய விரைவில் தமிழகத்தில் "கலைஞர் உணவகம்" திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்