"100வது வேலை வாய்ப்பு முகாம்" - 2 லட்சம் பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர்கள்

x

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற 100வது வேலை வாய்ப்பு முகாமில், 2 லட்சமாவது பணி நியமன ஆணையை அமைச்சர்கள் சி.வி.கணேசன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் வழங்கினர். சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொண்டு பணி நியமன ஆணையை வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 18 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். டிஎன்பிஎஸ்சி, உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியை, சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்