ஜெட் வேகத்தில் பறந்த தக்காளி விலை - ரூ.2000 வரை ஏலம் | Tomatoes price today

x

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தக்காளி விலை புதிய உச்சம் தொட்டது... தேனி காய்கறி சந்தைகளில் மொத்த விற்பனையில் 1 கிலோ தக்காளி 150 ரூபாய் வரையிலும், சில்லறை விற்பனையில் 170 ரூபாய் வரையிலும் விற்கப்படும் நிலையில், ஆண்டிப்பட்டி தக்காளி சந்தையில் 14 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டி 2 ஆயிரம் ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது. தேனியில் போதிய விளைச்சல் இல்லாததால் கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, மைசூர் பகுதிகளில் இருந்து தேனிக்கு தக்காளி கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்